Tuesday, April 6, 2010

வார்த்தைகள்
வாழும் நாட்களில் வார்த்தைகளின் முக்கியத்துவம் தான் என்ன
மனதை தொடும் வார்த்தைகள் , மனதுக்கு அமைதியை கொடுக்கும்
மனதை கொல்லும் வார்த்தைகள், மனதின் அமைதியை கெடுக்கும்
மயக்கும் வார்த்தைகள், சஞ்சலத்தை கொடுக்கும்
மன்னிக்கும் வார்த்தைகள், அமைதியை கொடுக்கும்
கோபிக்கும் வார்த்தைகள், கடுப்பை உருவாக்கும்
கொஞ்சும் வார்த்தைகள், இன்பத்தை கொடுக்கும்
கொல்லும் வார்த்தைகள், கோபத்தை உண்டாக்கும்

பேச தெரியவில்லை என்று எதுவும் கிடையாது
அனால் பேசும் பொழுது நாம் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையே மாற்றி விடுகின்றன
மற்றவர் மனம் நோக  யாரையும் பேச வேண்டாம்
மற்றவர் பேச சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டாம்
சொல்வது சுலபம் செய்வது தான் கடினம் 

இருந்து தான் பார்ப்போமே நம் வாழ்கை நமக்கு என்ன தருவது என்று



No comments:

Post a Comment

Your comments please.